அரிய நோய் வாகையர்கள்

கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தனிநபர்கள் மற்றும் என்ஜிஓக்கள் மலேசிய அரிய நோய் சமூகத்தின் தேவைகளுக்காக சோர்வின்றி ஆதரவு தெரிவித்தும் குரல் கொடுத்தும் வருகின்றனர். இது வெறும் ஆரம்ப பட்டியல் மட்டுமே, மேலும் இந்த பக்கத்தை நாங்கள் புதுப்பிக்க இது வளரும்.

சமூக ஊடகத்தில் (Facebook)

Dr Ngu Lock Hock
Dr Ngu Lock Hock

ஆலோசகர் கிளினிக்கல் ஜெனெடிச்டிஸ்ட் & குழந்தைநல மருத்துவர்
பரம்பரை வளர்சிதை நோய்களில் மருத்துவ முன்னணி

மரபியல் துறை, மருத்துவமனை கோலாலம்பூர், மலேசியா

மரு நிகு லோக் ஹோக், MBBS (மலேசியா), MRCP (UK), ஒரு மருத்துவ மரபியலாளர் & குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனையின் மரபியல் துறையின் மரபியல் வளர்ச்சிஐ நோய்களின் மருத்துவ முன்னோடியும் ஆவார், இது மலேசியாவின் மரபியல் வளர்சிதை நோய்கள் மற்றும் மரபியல் குறைபாடுகளுக்கு தேசி பரிந்துரை மையமாக சேவையாற்றி வருகிறது.

மலேயா மருத்துவ பள்ளியில் 1997ல் பட்டம் பெற்ற பிறகு, மரு நிகு பொது குழந்தைநல மருத்துவத்தில் பயிற்சி பெற்று இராயல் மருத்துவ கல்லூரி (UK) மருத்துவர் குழுவின் உறுப்பினர் நிலையை 2000ல் பெற்றார். பின்னர் அவர் கோலாலம்பூர் மருத்துவமனையின் மருத்துவ மரபியில் ஆய்வுஉதவியாக இணைந்தார். அவரது பயிற்சியின் ஒரு பகுதியாக, நெதர்லாந்தின் நிஜ்மெகன் மரபியல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா குறைபாடுகள் மையத்தில் ஒரு ஆண்டு செலவிட்டார்.

மரு நிகு, மலேசிய லைசோசோமல் நோய்கள் கூட்டமைப்பின் மருத்து ஆலோசகர் ஆவார், இது லைசோசோம் குறைபாடுகளுக்கான ஆதரவு குழுவாகும். அவர் சகஆய்வாளர்களால் மீளாய்வு செய்யப்படும் ஆய்விதழில் மரபியல் மற்றும் மரபியல் வளர்சிதை நோய் துறையில் 50 மூல எழுத்தாக்கங்களை வெளியிட்டுள்ளார் இதில் மரபியல் வளர்சிதை நோய்களின் ஆய்விதழ் மற்றும் மருத்துவ மரபியல் ஆய்விதழ் போன்றவையும் அடங்கும். அவர் 2003லிருந்து 100 க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் பன்னாட்டு நிகழ்வுகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டு 50க்கும மேற்பட்ட 50 சுதந்திர ஆய்வறிக்கைகளை வழங்கியுள்ளார். பன்னாட்டு ஆய்விதழ்நகளான மூலக்கூறு மரபியல் மற்றும் வளர்சிதைமாற்றம் மற்றும் மருத்துவ மரபியல் போன்றவற்றில் மீளாய்வாளராக அழைக்கப்பட்டுள்ளார். இவர் மலேசிய சுகாதார அமைச்சின் லைசோசோமால் சேமிப்பு குறைபாடுகளுக்கான நொதி மாற்று சிகிச்சைக்கான தொழில்நுட்ப குழு, அனாதை மருந்துகளுக்கான நிபுணர் குழு, மற்றும் ஆசிய பசிபிக் எம்பிஎஸ் வலைப்பின்னல் ஆகியவற்றின் உறுப்பினர் ஆவார். கோலாலம்பூர் மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ ஆய்வுளுக்கு முதன்மை ஆய்வாளராக உள்ளார் மேலும் கோலாலம்பூர் மருத்துவமனையின் ஆய்வு மீளாய்வு குழுவின் தலைவராக உள்ளார்.

Prof Thong Meow Keong

பேதியியல் மற்றும் பேராசிரியர்
ஆலோசகர் மருத்துவ மரபியல் நிபுணர்

மலேயா மருத்துவ மையம் பல்கலைக்கழகம்

பேரா தாங் மியோவ் கியோங் மலேயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் மற்றும் ஆலோசனை மருத்துவ மரபியலாளராக உள்ளார். இவர் ஒரு ஃபுல்பைர்ட் ஆய்வாளர் மற்றும் ஆஸ்திரேலிசியன் குழு சான்றிதழ் பெற்ற மருத்துவ மரபியலாளர் ஆவார். இவர் 1995ல் முதல் மரபியல் மருத்துவமனை மற்றும் மரபியல் & வளர்சிதை மாற்ற அலகினை மலேயா பல்கலைக்கழக, மருத்துவத் பிரிவின், குழந்தைநலத் துறையில் நிறுவினார். இவர் மலேசியாவின் அரிய நோய்கள் மற்றும் மரபியல் நோய்கள் குறித்து விரிவான கிட்டத்தட்ட 90 சகஆய்வாளரால் மீளாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ் தாள்களைப் பதிப்பித்துள்ளார், 6 புத்தகங்கள் மற்றும் ஒற்றை ஆய்வு கட்டுரைகள் மற்றும் 10 புத்தக தலைப்புகளை எழுதியுள்ளார். இதில் மருத்துவ மரபியல் குறித்த ஆக்ஸ்போர்டு கட்டுரையும் அடங்கும் மேலும் 150 சந்திப்புகளில் பேசியுள்ளார். உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி பல்வேறு ஆய்வு விருதுகளை வென்றுள்ளார். தலாசீயாமிவிற்கான மரபியல் ஆலோசனை தொகுதி உருவாக்கத்தில் மலேசிய சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றினார் மேலும் மரபியல் குறைபாடுகள் /அரிய நோய் பற்றிய பல்வேறு கல்வி, தொழில்நுட்ப அல்லது வழிகாட்டுதல் குழுக்களிலும் பங்கெடுத்துள்ளார். “பிறப்பு குறைபாடுகள் மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடுகள்” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை உருவாக்க உலக சுகாதார நிறுவனதால் அழைக்கப்பட்டார். தற்போது இவர் மலேசிய மருத்துவ கழகத்தின், குழந்தைநல துறை கல்லூரி தலைவர்; மருத்துவ மரபியல் சிறப்புத் துறையின் தலைவர், தேசிய சிறப்பு பதிவாளர், மலேசிய மருத்து மரபியல் சமூகத்தின் துணைத் தலைவர் மற்றும் மலேசிய அரிய நோய்கள் சமூகத்தின் ஆலோசகராக உள்ளார். இவர் மலேயா பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் நல துறைத்தலைவராக 2009-2011 வரையிலும் மற்றும் ஆசியா பசிபிக் மனித மரபியலாளர் சமூகத்தின் முந்தைய தலைவராகவும் (2012-2015) இருந்துள்ளார்.

Prof Asrul Akmal Shafie BPharm
Prof Asrul Akmal Shafie BPharm

சமூக மற்றும் நிர்வாக பார்மசி இணை பேராசிரியர், மருந்து அறிவியல் பள்ளி,
யுனிவர்சிட்டி சான்ஸ் மலேசியா

அஸ்ருல் அ ஷாஃபி மலேசிய செயின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ பொருளாதராத்துறை இணைப் பேராசிரியர் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழக இணைப்பேராசிராயர் ஆவார். இவர் ISPOR பன்னாட்டு ஆய்வுஉதவி மற்றும் மலேசிய புற்றுநோய் ஆய்வு விருதினைப் பெற்றுள்ளார். இவரது ஆய்வு விருப்பங்கள் பொருளாதார மதிப்பீடு மற்றும் மருத்துவ தொழில்நுட்ப மதிப்பீடு ஆகும் இதில் பல்வேறு பன்னாட்டு ஆய்விதழ்களில் 300 க்கு மேற்பட்ட சக ஆய்வாளர்கள் மீளாய்வு செய்த ஆய்வுகட்டுரைகள்/ சுருக்கங்களை (எச்-இண்டெக்ஸ் 29) வெளியிட்டுள்ளார் மேலும் எழு புத்தகங்கள்/ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் மலேசிய மருத்துவ பொருளாதார வழிகாட்டுதல் மற்றும் ISPOR மரபு நெறிப்பாடுகளை ஆகியவற்றின் இணை எழுத்தாளராக இருந்துள்ளார். இவர் மலேசியாவின் விலை செயல்திறன் வரம்பு தீர்மானிக்கும் ஆய்வு, EQ5D5L மதிப்பீடு ஆய்வு மற்றும் அனாதை மருந்துகளுக்கான அணுகல் ஆகிய ஆய்வுகளின் முதன்மை ஆய்வாளராக உள்ளார். இவர் மலேசிய மருந்தியல் ஆய்விதழின் தலைமை ஆசிரியர் ஆவார் மேலும் மருந்தியல் பொருளாதார், பிஎம்சி விலை செயல்திறன் மற்றும் வள ஒதுக்கீடு மற்றும் ஆசிய பகுதியில் மருத்துவ மதிப்பு ஆய்விதழ்களின் ஆசிரியர் குழுவில் உள்ளார். இவர் மருத்துவ தொழில்நுட்பங்களின் பொருளாதார மதிப்பீட்டிற்கான மலேசிய தொழில்நுட்ப ஆய்வுக்குழுவின் தலைவராகவும் மருத்துவ ஆய்வு குழுவிற்கான UK தேசிய நிறுவனம், தடுப்பு மருந்து உகந்ததாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல் பன்னாட்டு நிபுணர் குழு, மலேசிய புற்றுநோய் மருந்து அணுகல் ஆலோசனை குழு, மலேசிய தேசிய மருந்து கொள்கை வழிகாட்டல் குழு, எச்டிஆசியலிங்க் வலைப்பின்னல் ஆகியவற்றின் நியமிக்கப்பட்ட வல்லுநர் உறுப்பினராக உள்ளார்.

Dr. Azlina Ahmad Annuar

பி.எஸ்.சி. நரம்பியல்
லண்டன் பல்கலைக்கழகம் கல்லூரி; PhD Neurogenetics,

இம்பீரியல் கல்லூரி லண்டன்

மரு. அஸ்லினா அஹ்மத் அன்னூர் மலேசிய பல்கலைக்கழக, மருத்துவ பிரிவின் உயிரிமருத்துவ அறிவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஆவார். அவரது ஆய்வு விருப்பங்கள் நரம்பியல் அறிவியல் மற்றும் நரம்பியல் நோய்களின் மரபியல் ஆகியவையாகும், அவற்றில் சில அரிய நோய்களின் வரம்பிற்குள் வருகின்றன. இவர் ஆண்டு மூளை விழிப்புணர்வு வாரம், மரபிற்கான ஜீன்ஸ் மலேசிய பரப்புரை போன்ற பல்வேறு சமூக செயல்பாடுகளை நடத்தி வருகிறார், அவை மரபியல் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நோயாளிகள் ஆதரவு குழுவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றன.